Welcome to Ezhuthupizhai.
 • 0
 • Sale

  Ezhuthupizhai

  175.00 158.00
 • BEST SELLER
  Sale

  Ezhuthupizhai – Vikatakavi – Kannamma Combo

  520.00 364.00
 • Sale

  Ezhuthupizhai – Vikatakavi Combo

  325.00 228.00
 • HOT
  Sale

  Vikatakavi

  150.00 135.00
 • NEW
  Sale

  Vikatakavi – Kannamma Combo

  345.00 241.00
 • NEW
  Sale

  Ezhuthupizhai – Kannamma Combo

  375.00 259.00
 • UPCOMING

  Kan Simittal

  கண் சிமிட்டல் – எழுத்துப்பிழை 5 – குறுங்கதைகள்

  ‘சூப்பர்ல’ என்று ஒரு நாள் என் தோழி ஒருத்தி கண்சிமிட்டினாள். சாதாரணமாக பேசும்போதே வார்த்தைகளில் வரும் ட், த், ர், ன் – களுக்கு சொல்லில் மட்டுமில்லாமல் கண்களாலும் அழுத்தம் தருவாள். இமைகள் லேசாக சிமிட்டி சிமிட்டி பேசும். ஒரு நாள் இதை கவனித்தபின்பு அவளது கண் சிமிட்டல் மீது மட்டும் தனியான ஒரு காதல் வந்தது.

  ரசித்து ரசித்து செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் கண்சிமிட்டலுக்கும் என்றைக்குமே தொடர்பிருக்கும்.
  சில விஷயங்களை ரசித்துச் செய்யும் போது இமைகள் போட்டுக்கொள்ளும் ஹை-ஃபையாக எனக்கு ‘கண் சிமிட்டல்’ தெரிந்தது. சின்ன சின்ன கண் சிமிட்டல்கள் போலே சின்ன சின்னதாய் கதைகள் எழுத வேண்டும் என்பதுபோல் வந்த உணர்வை இரண்டு ஆண்டுகளாக சிறை வைத்திருந்தேன். 2020 ஆரம்பித்தது முதல் என்னவோ ஒரு உள்ளுணர்வு, கண் சிமிட்டல் இந்த வருடம் வந்தே தீர வேண்டும் என்று. இரண்டு பக்க மைக்ரோ கதைகளாக குறைந்தது 50 கதைகள் கொண்ட தொகுப்பாக ‘கண் சிமிட்டல்’ இருக்கும். அட்டை படம் ரெடி. விரைவில் அச்சு பதிப்பாக ‘கண் சிமிட்டல் – எழுத்துப்பிழை 5’ வெளியிடப்படும்.

  விரைவில் ‘கண் சிமிட்டல்’ அச்சு வடிவில் வெளியிடப்படும்.

 • NEW
  Sale

  Kannamma

  195.00 176.00

  யார் அந்த கண்ணம்மா ?

  ‘கூட்டமான பேருந்தில் ஓட்டுநர் அருகில் நின்று பயணச்சீட்டு வாங்குவதற்கு சில்லறையை நடத்துநருக்கு அனுப்பிவிட்டு டிக்கெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும்போது கட்டுமரம் போல கை மாறி மாறி தவழ்ந்து வந்து கொண்டிருக்கும் டிக்கெட் ஒரு அழகான ‘பெண்ணின்’ -கையை கடக்கும்போது நாம் திடீரெனெ அந்த பெண்ணின் முகத்தை காண முயற்சிப்போம். ஒருவேளை அவள் பார்வை நம்மை தீண்டிவிட்டால் ஒரு நிமிடம் உடலெல்லாம் ஏதோ செய்யும். அப்படி செய்தால் ? ‘

  – அவள்தான் கண்ணம்மா.

  ‘இரவு 2 மணிக்கு தூக்கம் வராத இரவில் எழுந்து நடந்து வீட்டின் பால்கனி-க்கு வந்தால், எதிர்வீட்டு பால்கனியில் செல்போன் ஒளியால் முகத்தில் மேக்கப் அணிவித்த பெண்ணொருத்தி நின்றிருப்பாள்.’

  – அவள்தான் கண்ணம்மா.

  ‘போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் 10 பேர் கூட்டமாக சேர்ந்து மிகப்பெரிய வாகனத்தைக் கூட சடாரென நிறுத்தி கடந்து செல்வர். அதில் 100 டிகிரி வெயிலில்கூட ஒரு பார்வையால் நம் மனதை ஜில்லென வருடிச் செல்வாள் ஒருத்தி’

  – அவள்தான் கண்ணம்மா.

  ‘சிறுவயதில் பென்சிலுக்கும் ரப்பருக்கும் சண்டை போட்ட பெண்தோழி ஒருத்தி திடீரென ஒரு குறுஞ்செய்தி மூலம் மீண்டும் நம் வாழ்வில் இணைந்து ஒவ்வொரு நொடியையும் அழகாக்கிடுவாள்’

  – அவள்தான் கண்ணம்மா.

  ‘அலுவலகத்திலோ, பக்கத்து வீட்டிலோ, கல்லூரியிலோ ஒரு பெண்ணை நாம் தினந்தோறும் கடந்து வரவேண்டியிருக்கும். ஏதோ ஒரு காரணத்தினால் அந்த உறவு திருமணத்தில் முடியாது என மனம் ஆணித்தனமாக நம்பும். ஆனாலும் அவள்மேல் இருக்கும் பாசமோ, அக்கறையோ, அன்போ கொஞ்சமும் குறையாமல் இருக்கும்’

  – அவள்தான் கண்ணம்மா

  ‘கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது நம் முன்னால் ஒரு பெண்ணொருத்தி நடந்து செல்வாள். தலை குளித்த தன் கூந்தலின் வாசம் அவள் வைத்திருக்கும் மல்லிப்பூவின் மேல் படந்திருக்க, அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் காற்று திருடி வந்து நம்மிடம் சேர்க்கும். அவளை ரசித்தபடியே கோவிலை சுற்றி வர இறுதி வரை அவள் முகத்தை காணாமலேயே போய்விடும். ஆனால் அவள் பின்னழகு மட்டும் நம் மனதுடன் பிண்ணிக்கொள்ளும்’

  – அவள்தான் கண்ணம்மா.

  ‘ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான பகுதி காதல். காதல் என்னும் புனித கடலின் கடல்கன்னியே, காதலி.’

  – அவள்தான் கண்ணம்மா

  ‘எங்கோ பிறந்து காதலில் இணைந்து திருமணம் என்னும் அற்புதமான நிகழ்வில் வாழ்க்கைத் துணையாகி ஒரு கடவுள் போல நம்மை வாழ்க்கை முழுதும் பாதுகாக்கும் மனைவி’

  – அவள்தான் கண்ணம்மா

  இப்படியான கண்ணம்மாக்களின் தொகுப்பே கண்ணம்மா.இந்த தொகுப்பு ஆண்கள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் இணைக்கும் என்று நம்புகிறேன்.

  காத்திருங்கள் அவரவரின் கண்ணம்மாவுக்காக.

 • UPCOMING

  Thiruvanmiyurin Azhagana Kolaikari

  திருவான்மியூரின் அழகான கொலைகாரி – எழுத்துப்பிழை 4

  ‘அட போ யா யோவ். வருஷா வருஷம் ஒரு போஸ்ட் போடுவ. எப்போ ரிலீஸ்னு கேட்டா இந்த வருஷம்னு சொல்லுவ. அதுக்கப்புறம் மெசேஜ் பண்ணி கேட்டாலும் இந்தா வந்துடும் அந்தா வந்துடும்னு டபாய்ப்ப. இதே வேலையா போச்சு யா உனக்கு.’ என்று திட்டியவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். பிஜேபி சத்தியமா இந்த வருஷம் ‘திருவான்மியூரின் அழகான கொலைகாரி’ ரிலீஸ் ஆகிவிடும்.

  மீண்டும் ஒரு முறை இந்த Glimpse-ஐ மீள்பதிவு செய்கிறேன்.
  இதை படித்துவிட்டாவது என் ‘திருவான்மியூரில் அழகான கொலைகாரி’க்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
  —–

  #Glimpse #திருவான்மியூரின்_அழகான_கொலைகாரி

  ‘மதுமிதா’ என்கிற ‘மது’
  என்னுடைய காதலி.

  மதுவை சந்தித்தது முதல் எப்படி அவள் என் காதலியானாள் என்பதைப்பற்றியெல்லாம் பிறகு சொல்கிறேன்.

  நம் வாழ்க்கையில் வருபவர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு விஷயத்தை நமக்கு கொண்டு சேர்க்கும் தூதுவர்களாகவே இருக்கின்றனர். நாம் வசிக்கும் இடம் நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் நாம் சந்திக்கும் மனிதர்கள் எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான்.

  நான் இதை உணர்ந்தது மது என் வாழ்வில் வந்த பின்புதான்.
  ஓவியம் மாதிரி அழகு.

  தெளிவான நெற்றி, நச்சென்று புருவம், பெரிய கண்கள். காஜல் போடாமலேயே கூர்மையாக இருக்கும்.

  கண்ணை மட்டும் கழட்டி எடுத்து நாட்டியப்பயிற்சி அளித்திருப்பாள் போல. எத்தனை செய்கைகள், எத்தனை கண்ணசைவுகள், எத்தனை வெளிப்பாடுகள், எத்தனை பெண்மை..?
  அந்தக் கண் மை-யில்.
  கண் மயில்…

  போதாக்குறைக்கு சலங்கை கட்டி ஆடுகிறது என் இதயம்.
  மேல தாளங்கலெல்லாம் இதயத் துடிப்பு.

  அதனை சுற்றி இருக்கும் ரத்த நாளங்கள் கம்பி வாத்தியங்கள்.
  ‘ச்சிங் ச்சாக்’ அடிக்கிறது அவள் தங்கக் கண் இமைகள்.
  கொன்று சாய்ப்பாள்.

  சித்திரவதைகளுக்கு கடவுள் நாள் குறித்தால் வெச்சு செய்வான் போலிருக்கிறது.

  கண்ணாலேயே சிரிப்பாள் பாதி நேரம்.

  உதடு பிரிந்து சிரிக்கும்போது மட்டும் அவளுடைய கண்கள் சிறியதாய் மாறி செம்ம க்யூட்டா இருக்கும்.

  சத்தமாக சிரித்தால் என் தோளை ஒரு முறை தட்டி சிரிப்பாள்.
  அந்த நொடிமட்டும் என் ஹார்ட் பீட் 74 முறை அடிக்கும்.

  ரெண்டு பீட்ஸ் எக்ஸ்ட்ரா.
  அவ கண்ணும் என் கண்ணும் சந்திக்கிறப்போ சின்னதா மனசுல ஒரு மணி அடிக்கும்.

  ‘என்ன பொண்ணு டி நீ’ என்று.ஒரு நாளைக்கு பத்து முறையாவது இந்த வாக்கியம் என் மனதில் வந்து போகும்.
  அவ பார்வை என் கண்கள் வழியே உள்ளே புகுந்து இதயம் வரை சென்று ஆராய்ச்சி செய்யும்.

  அப்படி ஒரு பார்வை பார்த்தால் திருப்தியாக ஒரு சிரிப்பு சிரிப்பாள்.
  ப்ரோஃபஷனல் முகம் அவளுக்கு.

  ஒரு பெண்ணை காண்பித்து இவள் M.B.B.S முடித்துவிட்டு ‘ஹவுஸ் சர்ஜன்’-ஆ இருக்கிறாள் என்று சொன்னாலோ , இவள் ஒரு ‘அட்வொகேட்’-என்று சொன்னாலோ அதை அப்படியே நம்பத் தோணும் அல்லவா.
  அப்படி ஒரு முகம்.

  நிரம்ப அக்கறை எடுத்துக்கொள்வாள்.

  ஒவ்வொரு முறை ஃபோன் பேசும்போது ‘சாப்டியா , டீ காபி ஏதாவது குடிச்சியா?’என்று கேட்டுக்கொண்டே இருப்பாள். இரண்டு பேரும் தூரத்தில் இருந்தால்கூட ஃபோன் பேசிக்கொண்டே சேர்ந்து காபி குடிக்கும் எங்கள் “COFFEE TIME” அவ்வளவு அழகு. அதே நிகழ்வு ஒரு மழை நாளில் நடந்தால்? சொல்லவா வேண்டும்.

  கொஞ்சம் தக்காளி போல் ஜம்மென்ற உடலமைப்பு.

  மாடர்ன் அண்ட் ஹோம்லி ட்ரெஸ் இரண்டுமே பொருந்தும் அவளுக்கு. பருத்தி ஆடையே அதிகமாக அணிவாள்.
  வலது கையில் ஒரு சில்வர் வாட்ச். இடது கையில் மெலிசாய் ஒரு ப்ரேஸ்லெட்.
  கழுத்தை ஒட்டி ஒரு மெலிசான செயின்.
  அதில் ஒரு சிறிய டாலர்.

  கொலுசு அணியமாட்டாள். நானும் ஏன்-என்று கேட்டதில்லை.
  நகம் கடிப்பாள். ஆனால் நான் நகம் கடித்தால் மட்டும் கோபம் வரும்.

  ரோஜாப்பூவை விட மல்லிப்பூ தான் அதிகம் சூடிக்கொள்வாள்.
  அந்த வாசனையில் அவ்வளவு மயங்குவேன் நான்.

  அவள் மேல் சாதாரணமாகவே ஒரு வாசனை வரும்.
  ‘SHE IS A ‘PERFUMED GIRL’.
  “Versace EDT For Women”-லாம் தோற்றுப்போய்விடும்.

  அவ வாசனைக்காகவே அவள் உபயோகித்த கைக்குட்டையை நான் வாங்கிவந்து வீட்டில் வைத்துக்கொள்வேன்.அதை நுகரும்போதெல்லாம் அவள் வாசனை என்னைக் கொல்லும்.கைக்குட்டையை துவைப்பதற்க்கே மனம் வராது.

  தலையை சிலுப்பி சிலுப்பி பேசுவாள்.

  நான் முதல் முறை பார்க்கும்பொழுது போனி டெயில் போட்டிருந்தாள்.
  இப்போ லேயர் கட்.

  அது ஒரு ஞாயிற்றுகிழமை காலை.
  வெள்ளி வெயில் பாதரசக் கடலைக் கொஞ்சிக்கொண்டிருந்த ஒரு அழகான காலையில் அவளை திருவான்மியூர் கடற்கரையில் சந்தித்தேன்.

  என்னைப்பார்த்ததும் அவள் கண்களில் ஒரு வெட்கம் ஏறிக்கொண்டது.

  அவளுக்கு எல்லாமே அழகு தான்.
  மதுவை நான் எப்போதெல்லாம் ‘இவ்ளோ அழகா இருக்காளே’-ன்னு நினைக்கிறேனோ அப்பொழுதெல்லாம் என் உலகமே அழகாக தெரியும்.ஆனால் நான் எப்போது பார்த்தாலும் அவள் என் கண்ணுக்கு அழகாய்தான் தெரிவாள்.அதனால் என் உலகம் எப்பயுமே அழகு தான்.

  பக்குவம் நிறைந்தவள்.

  நன்றாக சமைப்பாள்.

  தினமும் காலையில் அவள் தான் எழுப்புவாள்.
  பெரும்பாலும் ‘வாடா-போடா’ தான்.
  எப்பயாச்சும் ‘ஜி’-என்று கூப்பிடுவாள்.

  எனக்கு மனைவி , காதலி ,தோழி, மகள் எல்லாமே மது தான்.

  பொதுவாகவே எனக்கு எந்த அறிவுரையும் செய்ய மாட்டாள்.
  எங்கே போகிறேன், என்ன செய்கிறேன் என்று எல்லாவற்றையும் நானே சொல்லிவிட்டால் எந்த பிரச்சனையும்
  இல்ல.இல்லையென்றால் பிரச்சனை செய்வாள். பிரச்சனை என்னவென்றால் சிரிக்கவே மாட்டாள் ஒரு நாள் முழுக்க.

  சிரித்தால் அவ கன்னத்தில் லேசாக, சின்னதாக, அழகாக குழி விழும். ஆனால் நான் விழுந்த பெரிய பள்ளம் அதுதான்.
  நான் கண்ணு வெச்சு வெச்சுதான் அவள் குழி விழுந்துவிட்டதாக ஒரு எண்ணம் எனக்கு.

  நன்றாக படிப்பாள். நான் அவளை மட்டுமே நன்றாக படிச்சேன்.
  நானும் மதுவும் வேறுவேறு டிபார்ட்மென்ட். நான் தகவல் தொழில்நுட்பம்(IT) அவள் கணினி அறிவியல்(CSE).
  நிறைய கட் அடித்துவிட்டு சுற்றுவோம்.

  சுத்தமான நட்பு சில நொடிகள்ல காதலா மாறின அந்த நிமிடங்கள் மறக்க முடியாதது. இன்று நினைத்துப்பார்த்தால்கூட சுவாரஸ்யமான நிகழ்வுகள், வலிகள், பிரிவுகள் , அழகான தருணங்கள்ன்னு ஒரு அழகான காதல்.

  இது ஒரு சென்னைக்காரியின் காதல் கதை.

  மது ஒரு சென்னைக்காரி.

  உண்மையில் திருவான்மியூர்காரி.

  திருவான்மியூரின் அழகான கொலைகாரி.

   

  விரைவில் ‘திருவான்மியூரின் அழகான கொலைகாரி’ அச்சு வடிவில் வெளியிடப்படும்.

No products were found matching your selection.

Navigation

MY CART

Close