‘எழுத்துப்பிழை’ – ஒரு ஆனந்தப் பயணம்.

எந்திர வாழ்க்கையிலிருந்து வெளிவந்து இனிய நினைவுகளில் திளைத்திட ஒரு புத்தகத் தொடர்.

எழுத்துப்பிழை ஒரு ரசனை. அம்மா , அப்பா, நண்பன், காதலி, வலிகள், தோல்வி, திருமணம், வளர்ப்பு நாய், காதல் இன்னும் நிறைய.

கவிதை, சிறுகதை, குறுங்கதை என பலவும் இதில் உண்டு.

படிக்கும் பொழுது நினைவுகளில் காட்சிகள் வந்து போகும் அழகிய நிகழ்வு.

கொஞ்சம் ‘உண்மை’-யில் நிறைய ‘பொய்’ சேர்த்து செய்த பொய்த் தேன் அமிர்தம் எழுத்துப்பிழை.

முதல் புத்தகமான ‘எழுத்துப்பிழை’ பிப்ரவரி 2015-ல் வெளிவந்தது. இது சிறுகதைகள், குறுங்கதைகள் மற்றும் சில கவிதைகளையும் உள்ளடக்கியது.

இரண்டாம் புத்தகமான ‘விகடகவி’(எழுத்துப்பிழை 2.0) அக்டோபர் 2015-ல் வெளிவந்தது. முழுவதும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. விகடகவி என்னும் சொல் தமிழில் பின்பி(Palindrome). அதைப்போன்றே ஒரு கதையை ஆண் – பெண் என இரு கண்ணோட்டத்தில் அணுகியிருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பு. எழுத்துப்பிழை முதல் பாகத்தில் இடம் பெற்ற சில கதைகளின் தொடர்ச்சியும் விகடகவி-யில் உண்டு.

மூன்றாம் புத்தகமான ‘கண்ணம்மா’(எழுத்துப்பிழை 3.0) பிப்ரவரி 2017-ல் வெளிவந்தது. கண்ணம்மா ஒரு ஆணின் கனவுக்காதலி. அவளுக்கான இரு வரிக் கவிதைகளே கண்ணம்மா.

முதல் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு(எழுத்துப்பிழை 1.1) ஏப்ரல் 2018-ல் வெளிவந்திருக்கிறது. கண்ணம்மாவின் இரண்டாம் பதிப்பு (எழுத்துப்பிழை 3.1) ஜனவரி 2019ல் வெளிவந்திருக்கிறது.

நான்காம் புத்தகமாக ‘திருவான்மியூரின் அழகான கொலைகாரி’யும்(எழுத்துப்பிழை 4.0)

ஐந்தாம் புத்தகமாக ‘கண் சிமிட்டல்’ம்(எழுத்துப்பிழை 5.0) வெளிவர இருக்கின்றன.

BOOKS

ON SALE